
மஸ்ஜிதுல் ஹராம் விரிவாக்கப் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் விரைவில் விரிவாக்கம் முடிந்து, மேற்காணும் மாதிரித் தோற்றத்தில் மிளிரவிருக்கும் புனித காபாவில் மேலும் லட்சக்கணக்கான அல்லாஹ்வின் விருந்தினர்கள் இலகுவாக கடமைகளை நிறைவேற்ற முடியும்.
புகைப்படம்: அலா, சவூதி அரேபியா












இப்புவியின் வட தென் துருவப் பகுதிகளிலும், இமாலயம் போன்ற நெடுதுயர்ந்த மலைகளின் சிகரங்களையும் வெள்ளாடை போர்த்தி அழகூட்டி அலங்கரித்துக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் மெதுவாக உருகி, சொட்டுச் சொட்டாக விழுந்து, சிறு சிறு நீரோடைகளாகி, அவைகள் ஒன்றாகி ஆறாகப் பெருக்கெடுத்து பெரும் நதிகளாகி, நம் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான விவசாயத்தையும், எண்ணற்ற இயற்கை வளங்களையும் வாரி வழங்கி வருகின்றன.